மனித உரிமை முன்னுரிமை நாடுகள் பட்டியலில் தொடர்ந்தும் இலங்கை

Monday, 16 July 2018 - 19:27

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மனித உரிமை முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலேயே இலங்கையை பிரித்தானியா தொடர்ந்தும் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடா்பில் பிரித்தானியா முக்கியமாக அவதானம் செலுத்தும் என்பதோடு, மனித உரிமை விருத்திக்கான சாதகமான ஒத்துழைப்புகளையும் வழங்கும்.

இலங்கையில் குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்பு சார்ந்த பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள் மீதான தாக்குதல்கள்களும் பதிவாகி இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.