கைதிகளைத் தூக்கில் இடுபவர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோர நடவடிக்கை

Monday, 16 July 2018 - 21:21

%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட 18 பேரின் பெயர் பட்டியலில் முதலில் இருப்பவர் பெண் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி, போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்தபடியே மீண்டும் கடத்தல்களை வழிநடத்தியவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு 18 பேர் கொண்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தபட்டியலில் முதலில் இருப்பதே ஒரு பெண்ணாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் இடம்பெறுகின்ற போதைப் பொருள் விற்பனையில் அதிகம் ஈடுபடுவது பெண்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான 'அலுகோசு' எனப்படும் தூக்கிலிடுபர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு அடுத்த வாரம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அரசாங்கம் மரண தண்டனையை அமுலாக்குமாக இருந்தால், வேதனம் பெற்றுக் கொள்ளாமலேயே தூக்கிலிடும் பணியை தாம் ஏற்றுக் கொள்வதாக, சிலாபம் - ஆராச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த 71 வயதான வயோதிபப் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.