சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ள அனுமதி

Tuesday, 17 July 2018 - 8:26

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+
விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டவேளை, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
 
திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவினால் இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வில் பங்குகொண்டிருந்த அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்ப வேண்டும் என அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தெரிவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் குறித்த நிகழ்வில், அமைச்சர்களான திலக் மாரப்பன, வஜிர அபேவர்தன, வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.