காவற்துறை அதிகாரிகளை தாக்கிய பிரதேச சபை தலைவருக்கு நேர்ந்த கதி!!

Tuesday, 17 July 2018 - 15:00

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%21%21
மூன்று காவற்துறை அதிகாரிகளை தாக்கி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டி பிரதேச சபையின் தலைவர் எம்.கே.அமில்க்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் , 30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பனாமுரே காவற்துறையில் பணியாற்றிவந்த காவற்துறை அதிகாரிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.