பல்கலை மாணவரின் சடலம் மூன்று நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு (காணொளி)

Tuesday, 17 July 2018 - 15:42

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
அரநாயக்க அசுபினி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயிருந்த பல்கலை மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 14ம் திகதி பிற்பகல் இந்த மாணவர் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த போது அங்கிருந்து வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.

பின்னர் , பிரதேசவாசிகள் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் அவரை தேடிய போதும் அவரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் ,நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றிருந்த போதும் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து இதுவரை 14 பேர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் , நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்தவர்கள் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் நீர் அடங்கிய கல்குகைகளில் விழுவதாகவும் , அங்கு சில நாட்களின் பின்னரே உடலங்களை மீட்க முடியும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடற்படை மற்றும் சுழியோடிகளின் உதவிகள் கிடைக்கப்பெற்றாலும் , அங்கு விழுந்து உயிரிழந்த அனைவரின் உடல்களையும் 74 வயதுடைய முதியவர் ஒருவரே மீட்டுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த இடம் ஆபத்தானது என குறிப்பிடப்பட்டிருந்த போதும் , இங்கு வருபவர்கள் அதனை பொருட்படுத்துவதில்லை என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.