திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

Tuesday, 17 July 2018 - 19:17

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் நாளைய தினம் இடம்பெறவுள்ள திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

6வது உலக வனப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து மூன்று நாள் விஜயமாக ஜோர்ஜியா சென்றுள்ளார்.

இதற்கமைய, ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி (Shota Rustaveli Tbilisi)சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அந்தப் பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது.

இந்த அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும்.

தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.

ஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.