உலக கிண்ண அணியில் லசித் மாலிங்க இடம்பிடிப்பாரா..?

Thursday, 19 July 2018 - 12:02

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%3F
நாடே எதிர்பார்த்துள்ள 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் வீரர்களை நெறிப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இலங்கை கிரிக்கட்  தெரிவு குழு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறைந்தது 15 முதல் 20 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் எனவும் இலங்கை கிரிக்கட் தெரிவு குழுவில் அங்கம் வகிக்கும் சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், நடைபெறவுள்ள போட்டிகளின் போது உபாதையின்றி வீரர்களை பங்கேற்க செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு 11 மாதங்கள் காணப்படுகின்ற நிலையில், இலங்கை கிரிக்கட் அணிக்கு டெஸ்ட் போட்டிகளை தவிர்ந்த தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கிலாந்து மற்றும் மீண்டும் தென் ஆப்ரிக்காவுடன், 20 சர்வதேச ஒருநாள் போட்டிகள் காணப்படுவதுடன் 5 இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தொடரிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

மேலும் தென் ஆப்ரிக்காவுடன் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், ஒரு இருபதுக்கு இருபது போட்டியும் இங்கிலாந்துடன் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், ஒரு இருபதுக்கு இருபது போட்டியும் இடம்பெறவுள்ளதோடு மீண்டும் தென் ஆப்ரிக்காவுடன் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தொடர்பில் தெரிவு குழுவின் தலைவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்...
 
உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்காக தெரிவு செய்யப்படும் வீரர்களை இலங்கை தேசிய அணியின் ஏ பிரிவில் விளையாட வைத்துள்ளோம். 

உபுல் தரங்க ஏ அணியில் விளையாடுகின்றமையும் அந்த திட்டமிடல்களுக்கு அமைவாகவே.

சிரேஸ்ட மற்றும் புதிய கிரிக்கட் வீரர்களும் இலங்கை ஏ அணிக்குள் உள்வாங்கப்பட்டதற்கமைய, திறமைகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.

லசித் மாலிங்கவிற்கும் இது தொடர்பில் நான் அறிவித்துள்ளேன்.

மாகாண மட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு லசித் மாலிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இறுதி ஓவர்களை வீசுவதற்கு லசித் மாலிங்க போன்ற வீரர் ஒருவர் அவசியம் என பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.

அதற்கமைய தென் ஆப்ரிக்காவுடனான சர்வதேச போட்டிகளில் லசித் மாலிங்க விளையாடுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இருபதுக்கு இருபது மாத்திரமின்றி சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய இரு போட்டிகளிலும்  விளையாட எமது வீரர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

உபாதைக்கு உட்பட்ட வீரர்கள் அனைவரும் உடல் நலம் பெற்று அணிக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் 

எங்களுடைய விளையாட்டு மைதனங்களில் காணப்படுகின்ற பந்துவீச்சு திடல்கள் வினைத்திறனாகயில்லாமல் உள்ளது.

ஆகையினால் அது தொடர்பிலான தீர்மானங்களை அவசரமாக அறிவிக்க முடியாது.

லஹிரு குமார, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷமந்த சமீர இசுறு உதான, கசுன் ராஜித ஆகிய வேகபந்து வீச்சாளர்களுடன் லசித் மாலிங்கவிற்கும் கடுமையான போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

204 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 301 ஒரு விக்கட்களை கைப்பற்றிய 34 வயதுடைய லசித் மலிங்க, உபாதை மற்றும் வேறு காரணங்களுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.