விராட் கோலியின் அதிரடி கருத்து...!!

Thursday, 19 July 2018 - 13:35

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...%21%21
இந்திய ஒருநாள் கிரிக்கட் அணியின் நான்காம் இலக்கத் துடுப்பாட்டவீரர் தெரிவு தொடர்பில் தொடர்ந்தும் குழப்பநிலை நீடிக்கிறது.
 
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்கு, மத்திய தர துடுப்பாட்ட வரிசையின் பலவீனமே காரணம் என்று அணித் தலைவர் கோலி குறிப்பிட்டிருந்தார்.
 
இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, நான்காம் இலக்க வீரராக லோகேஸ் ராகுலை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
நான்காம் இலக்க வீரரை பலப்படுத்துவதன் மூலம், எம்.எஸ். தோனி மீதான அழுத்தத்தை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதேநேரம் எம்.எஸ். தோனி விரைவாக அடித்தாட வேண்டியது அவசியம் என்றும் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
 
இதேவேளை, மகேந்திரசிங் தோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறும் திட்டத்தில் இருப்பதாக வெளியான செய்தி மறுக்கப்பட்டிருக்கிறது.
 
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி நிறைவில் அந்த போட்டியில் பயன்படுத்திய பந்தை தோனி போட்டி நடுவரிடம் இருந்து பெற்றுக் கொண்டமையை மையப்படுத்தி, அவர் ஓய்வுப்பெறவிருப்பதாக அனுமானங்கள் வெளியிடப்பட்டன.