விலாடிமீர் புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு..

Friday, 20 July 2018 - 8:50

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு, ரஷ்ய ஜனாதிபதி விலாடிமீர் புட்டினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடத்துள்ளார்.
 
டொனால்ட் ட்ரம்பின் ஊடக செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்துக்கான கலந்துரையாடல்கள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க பிரஜைகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ரஷ்யாவை அனுமதிக்கும் யோசனை ஒன்றை புட்டின் முன்வைத்திருந்தநிலையில், அதனை முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்திருந்தார்.

இரண்டு தலைவர்களும் பின்லாண்டில் கடந்த திங்கட்கிழமை கலந்துரையாடி இருந்த போதும், இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதா? என்பது குறித்த விபரங்கள் வெளியாக்கப்படவில்லை.
 
இந்த நிலையிலேயே ரஷ்யாவின் ஜனாதிபதிக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்புவிடுத்துள்ளார்.
 
எவ்வாறாயினும், ரஷ்ய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இதுவரையில் ரஷ்யாவின் தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியாக்கப்படவில்லை.