இலங்கை அணி பந்து வீச்சாளர்களால் தென்னாபிரிக்க அணிக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

Saturday, 21 July 2018 - 14:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21%21
124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்போது , இலங்கை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட அகில தனஞ்சய 5 விக்கட்டுக்களையும் , தில்ருவன் பெரேரா 04 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 338 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தனஞ்ஜய டி சில்வா 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

தனுஸ்க குணதிலக 57 ஓட்டங்களையும் , திமுத் கருணாரத்ன 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மஹாராஜ் 9 விக்கட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.