கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார் பிரதமர்

Saturday, 21 July 2018 - 18:19

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+
நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின்  முன்னேற்றம் கருதி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில்  நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் பிரதமர் அதற்கான சிட்டையையும் வழங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.