3ஆம் நாள் ஆட்டம் இன்று

Sunday, 22 July 2018 - 9:57

3%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
 
போட்டியின், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தென்னாபிரிக்கா அணி தமது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
இதற்கமைய, இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 365 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.