வெற்றியை நோக்கி இலங்கை அணி!!

Sunday, 22 July 2018 - 17:41

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21%21+
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபரிக்கா அணி 5 விக்கட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இதில், ரங்கன ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா இரு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 338 ஓட்டங்களையும் , இரண்டாவது இன்னிங்சில் 275 ஓட்டங்களையும் பெற்றது.

தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் , தற்போது 490 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.

அதன்படி , 5 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி, வெற்றிப் பெறுவதற்கு இன்னும் 351 ஓட்டங்கள் பெறவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.