தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை - காரணம் வெளியானது

Monday, 23 July 2018 - 6:14

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இந்த தடை அமுலுக்கு வருமெனவும், இன்றைய தினம் தென்னாபிரிக்க அணியுடனான நான்காம் நாள் ஆட்டத்திலும் அவர் பங்குகொள்ள மாட்டார் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வெளிநாட்டுச் பெண்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.