மீண்டும் வரும் சுப்பர் சொனிக் வாநூர்திகள்

Monday, 23 July 2018 - 20:18

+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஒலியை விட விரைந்து செல்லக்கூடிய சுப்பர் சொனிக் வாநூர்திகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் முன்னணி, வாநூர்தி தயாரிப்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் பிருத்தானிய நாடுகள் இணைந்து தயாரித்த கொன்கோட் ரக வாநூர்தி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சேவையின் மூலம் பயண நேரம் அரைவாசியாக குறைக்கப்பட்டதனால், பயணிகள் மத்தியில் அதில் பயணிக்க பெரும் ஆர்வத்தை காட்டினர்.

இருப்பினும், 2000ஆம் ஆண்டு கொன்கோட் வாநூர்தி ஒன்று விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 109 பேரும் பலியாகினர்.

அதேபோன்று அமெரிக்க இரட்டை கோபூர தாக்குதல் என்பனவற்றை அடுத்து கொன்கோட் சேவை முற்றாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சூப்பர் சோனிக் விமான சேவை நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் அந்த ரக வாநூர்திகளை உற்பத்தி செய்ய நான்கு பிரபல நிறுவனங்கள் தற்போது முன்வந்துள்ளன.

சில மணி நேரத்தில் உலகின் எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ரக வாநூர்திகள் அடுத்த சில வருடங்களில் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.