உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டி / தென்கொரியா படுதோல்வி

Monday, 23 July 2018 - 20:23

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%2F+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
லண்டனில் நடைபெறும் உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டி ஒன்றில் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஏழுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள நடப்பு வெற்றி அணியான நெதர்லாந்து அணி தென் கொரிய அணியை எதிர்கொண்டது.

இதே பிரிவில் நடந்த பிறிதொரு போட்டியில் இத்தாலி அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.

இது தவிர, 'சி' பிரிவில் நடந்த போட்டியில் ஆர்ஜண்டினா ஆறுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வென்றுள்ளது.

இந்தப் போட்டி தொடரில் பங்குகொண்டுள்ள இந்திய அணி ஆரம்ப ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டு சமன் நிலையில் உள்ளது.

இந்த அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.