Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 10 August 2018 - 19:25
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் - தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு
2,879

Views
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொழில் சங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இன்று இடம்பெற்ற சில தொடரூந்து சேவைகளும் நாளை முதல் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதன முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக தொடரூந்து செலுத்துனர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், அலுவலக தொடரூந்து சேவைகள் நேற்றைய தினமும், இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த பணி புறக்கணிப்பின் காரணமாக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பாதிப்படைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் முதல் விசேட தொடரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடரூந்து தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள தொடரூந்து செலுத்துனர்களின் உதவியாளர் சங்கம் தங்களால் தொடரூந்து சேவையை முன்னெடுக்க முடியும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொடரூந்து பணிப்புறக்கணிப்பை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அமைச்சர் மனோ கணேசன், தொழிற்சங்கம் என்ற ரீதியில் பயங்கவாதம் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,233 Views
HiruNews
HiruNews
HiruNews
9,463 Views
HiruNews
HiruNews
HiruNews
8,742 Views
HiruNews
HiruNews
HiruNews
22,837 Views
HiruNews
HiruNews
HiruNews
1,288 Views
HiruNews
HiruNews
HiruNews
55,620 Views
Top