இலங்கை சுற்றுலாவின் கிழக்கு வாசல் மையம்

Sunday, 12 August 2018 - 13:37

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+
திருகோணமலையை இலங்கை சுற்றுலாவின் கிழக்கு வாசல் மையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுற்றுலா மற்றும் ஏற்றுமதியினை கணிசமான அளவு மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப வரைவு, பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்திகளை அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டம் தனித்துவத்தை கொண்ட வகையில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை பிராந்தியத்தின் நகர அபிவிருத்தியின் கீழ் காணி உபயோகம், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு போன்றவை நவீன தன்மையை அடைய முடியும்.

இதன் மூலம், பிராந்தியத்தின் சுற்றாடலை பேணுவதுடன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க முடியும்.

இது தவிர, இயற்கை திருகோணமலை துறைமுகம் இயற்கையான வகையில் அமைந்துள்ளதனால் ஏற்றுமதி நடவடிக்கைகளை இலகுவாக்கவும் துரித கதியிலும் மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.