ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் - சங்கக்கார அதிரடி கருத்து

Monday, 13 August 2018 - 13:49

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தாம் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லையென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், தமக்கு அவ்வாறான அபிப்பிராயங்கள் எதுவும் இல்லையெனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவை என்பது கௌரவமான பணி என்றும், நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மிகுந்த பணியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கு சிறந்த மற்றும் பொருத்தமானவர்களை தொலை நோக்கு பார்வையில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும், வெற்றிகரமான அரசியல் மற்றும் பொருளாதார மாற்றம் என்பது ஓரிரவில் செய்யக்கூடிய ஒன்றல்லவென்றும் குமார் சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல்வாதிகளின் நல்ல முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.