மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Monday, 13 August 2018 - 20:41

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+400+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

ஏலவே 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக கோரப்பட்டிருந்த நிதியின் ஒரு பகுதி கிடைக்கப்பெற்றதுடன், எஞ்சிய பகுதிக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது.

முழுமையான நிதி கிடைக்கப்பெற்றதும் குறித்த காணிப் பரப்பு விடுவிக்கப்படும்.

அதேநேரம், இன்னும் 400 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அடையாளப்படுத்தியுள்ளதாகவும் விரைவில் அது குறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.