போராட்டத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை

Tuesday, 14 August 2018 - 19:28

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான பணிப்புரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண் கைதிகள், தங்களது போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமெனின் அமைச்சின் அதிகாரி ஒருவரை அனுப்பவும் தயார் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் உரிய இடவசதிகள் இல்லாமை மற்றும் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் 10 பேர், இன்று இரண்டாவது நாளாகவும் கூரையின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் கைதிகள் 4 பேர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.