தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இந்தியா உதவ வேண்டும்!!! சண்.குகவரதன்.

Wednesday, 15 August 2018 - 18:29

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%2C+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21%21%21++%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.+
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண்பதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன்றைய இந்திய சுதந்திர தினத்தில் அதற்கான கோரிக்கையை முன்வைக்கிறேன் என்று மேல் மாகாண சபை உறுப்பினர்,பொறியியலாளர் சண்.குகவரதன்.தெரிவித்துள்ளார் .

இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று பாரத தேசத்தின் சுதந்திர தினம், இறுதியாக நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் , அதற்கு முன் இரண்டு முறை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம், ஏழை மக்களின் துயர் துடைக்க மறுத்ததனையும் , பாரிய ஊழல், பாலியல் கலாச்சாரம் , மத சீரழிவுகள் என்ற எல்லை மீறிய யதார்த்தத்தினால் , அச் செயற்பா்ட்டினால் வெறுப்படைந்த மக்கள், சுனாமி எனக் கிளர்ந்தெழுந்து பாஜக கூட்டணியின் முதன்மை வேட்பாளர் மோடிக்கு ஆதரவு அளித்து பிரதமர் ஆக்கியதன் மூலம்,அந்த தேர்தல் இந்திய சுதந்திர வரலாற்றை திரும்பி பார்க்க வைத்தது , அன்று முதல் இன்றுவரை இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களின் அரசாங்கம் , நிற்சயமாக இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை , ஒவ்வொரு இலங்கை தமிழ் குடி மகனுக்கும் உள்ளது , அவரது இலங்கை விஜயத்தின் போதும் கூட , மாகாணசபைக்கான அதிகாரங்கள் பதின்மூன்றுக்கு அப்பால் செல்ல வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடாக இந்தியா மாறியது.

இந்த சுதந்திரத்துக்காக இந்தியா கொடுத்த விலை எண்ணிலடங்காதது,எங்கள் மண்ணிலும் தமிழர்களின் நிலை இன்றும் அப்படியே தான் இருக்கிறது என தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர்,பொறியியலாளர் சண்.குகவரதன்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் , இலங்கையின் பெரும்பான்மை இரண்டாவது,இனமாகவும்,மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்று வரை தொடர்ச்சியாக முப்பது வருடகால யுத்தத்தின் பின்னரும் அதைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு வரை நடைபெற்ற நிழல் யுத்தத்தின் பின்னரும் ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களாக இருந்தாலும் சரி இடம்பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி எதோ ஒரு விதத்தில் உயிர் ரீதியாக, உடைமை ரீதியாக, உளவியல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை பெரும்பான்மை இனத்தின் தலைமைகள் மனிதாபிமான ரீதியாக ஏற்று அதனை நடைமுறை சார்த்தியமாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் ,இந்தியாவின் மோடி அரசாங்கம் , நிச்சயமாக தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை ,ஒவ்வொரு இலங்கை தமிழ் குடி மகனுக்கும் உள்ளது என மேலும் தெரிவித்தார் .

வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீள கட்டி எழுப்ப முடியாதவகையில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

யுத்தங்களின் போது அங்கு சுமார் 80 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் வரை பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர்.

இவர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாமல் மிகவும் அல்லல் பட்டுவருகின்றனர் இதே போன்றே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு இருகின்றனர் என்ற போர்வையில் அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உரிய திட்டங்களோ செயற்பாடுகளோ இல்லாத நிலையில் அவர்களின் பொருளாதாரமும் அன்றாட வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாகவே இருகின்றது.

என்பதையும் குறிப்பிட்டு காட்டினார்.

சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

வெளியிலுள்ள அவர்களது உறவினர்கள் தவியாய் தவிக்கின்றனர்.

தமிழர்களுக்குதான் தண்டனைகூட இரட்டிப்பாக வழங்கப்படுகின்றது.

இந்நிலைமை மாறவேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்.

அவ்வாறு அல்லாவிட்டால் விசேட நீதிமன்றங்களை அமைத்து வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்து ஒரு தீர்வை வழங்கவேண்டும்.

இந்நிலைபாட்டை கையாளும் முழு பலமும் இந்தியாவிடம் உள்ளது என அவர் என மேலும் தெரிவித்தார் .

அதேவேளை, காணாமல்போனோர் பிரச்சினை தீராத தலைவலியாக இருந்துவருகின்றது.

பிள்ளைகளை தொலைத்த தாய்மாரும், கணவனை தமது கண்முன்னே படையினரிடம் ஒப்படைத்த பெண்களும் தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என தெரியாமல் தினம், தினம் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

என்றாவது ஒரு நாள் அவர்கள் திரும்பிவருவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்கள் மனங்களில் இருக்கின்றது.

ஆகவே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்பாட்டை உடனடியாக துரிதப்படுத்த இந்தியா முன் வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று மக்கள் மத்தியில் படி படியாக நல்லிணக்கம் ஏற்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது ,அண்மையில் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கூட சிங்கள மக்களுக்கு இருக்கும் அரசியல் உரிமையை தமிழ் மக்கள் கேட்பதில் எந்த பிழையும் இல்லை எனவும், சில அதிதீவிர பௌத்த இனவாத செயற்பாட்டாளர்கள் இதனை தடுப்பதாகவும் மிக தெளிவாக கூறியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் கூட ,தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மையமாக கொண்டு ,அரசியல் தீர்வின் தேவையை வேறு கோணத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான செயல்பாடுகள் சாதகமாக உள்ள காலத்தில் ,இந்தியா அதனை சரியாக பயன்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது ,மீண்டும் நம்பிக்கையுடன், பாரதமாதாவுக்கு எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், என தனது நீண்ட வாழ்த்து செய்தியில் சண்.குகவரதன். தெரிவித்தார்.