இந்திய கிரிக்கட்டில் பெரும் சோகம்...!! திடீர் மரண சம்பவம்...

Thursday, 16 August 2018 - 9:24

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21%21+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...
அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அஜித் வாடேகர் யுதவை தனது 77 வயதில் நேற்று காலமானார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை அஜித் வடேகர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

1964 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஜிட் வாடேகர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

1974 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார்.

இந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட சில விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.