கோஹ்லியால், தரப்படுத்தலில் அனைத்து வீரர்களுக்கும் முதலிடம் வழங்கிய ஐசிசி!!

Thursday, 16 August 2018 - 12:58

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%21%21
அனைத்து வீரர்களுக்கு முதலிடம் வழங்கிய ஐசிசியின் புதிய தரப்படுத்தல்!!

ஐ.சி.சி நேற்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அனைத்து வீரர்களும் முதல் இடத்தைப் பிடித்தனர்.

இது என்னடா குழப்பம் என்று யோசித்தால், இது ஐசிசியின் வேடிக்கையான விளையாட்டு என கூறப்படுகிறது.

ஐசிசி டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கான அணிகள், பந்துவீச்சாளர்கள் ,துடுப்பாட்ட வீரர்கள், சகலதுறை வீரர்கள் என தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த விராட் கோஹ்லி, இந்த வாரம் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பிரபல ராப் பாடகர் கானே வெஸ்ட், இது குறித்து ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

யாரும் யாரை விடவும் சிறந்தவர்கள் இல்லை என்று அதில் அவர் கூறியிருந்தார்.

உடனடியாக அதற்கு பதிலளிக்கும் வகையில், ஐசிசி புதிய வேடிக்கையான தரவரிசையை வெளியிட்டது.

அதில் அனைத்து வீரர்களுக்கும் முதலிடம் தரப்பட்டுள்ளது.

கானே வெஸ்ட் அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தாசியானின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.