இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகான விபரங்கள் வெளியீடு..!!

Friday, 17 August 2018 - 11:36

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81..%21%21
ஸ்ரீ லங்கா கிரிக்கட் இருபதுக்கு இருபது  தொடரின் முதலாவது ஊடக சந்திப்பு இன்று இலங்கை கிரிக்கட் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கட் இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பணம் தொகை தொடர்பில் வினவப்பட்டது.

இதற்கமைய  போட்டி தொடர்பில் வெற்றி பெறும் அணிக்கு 2 மில்லியன் ரூபாய் பணத் தொகை வழங்கப்படவுள்ளதுடன் , 2 இடம் இடத்தினை பிடிக்கும் அணிக்கு 1.5 மில்லியன் ரூபாய் பணத் தொகை வழங்கப்படவுள்ளமை சுட்டிக்க்காட்டத்தக்கது.

இதனிடையே, போட்டியில் இலங்கை அணியின் பிரபல வீரர்கள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை, பல்லேகல மற்றும் கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் இணைப்பு...