பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Saturday, 18 August 2018 - 12:15

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
 
ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் இந்த பதவியேற்பு இடம்பெற்றது.
 
கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பி.ரீ.ஜ  கட்சியின் தலைவரான இம்ரான் கான் வெற்றிப்பெற்றார்.
 
இம்ரான் கான், பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற போதிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததன் காரணத்தினால் பிரதமராக பதவியேற்பது தாமதமானது.
 
எவ்வாறாயினும் நேற்றைய தினம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, இம்ரான் கானுக்கு தேவையாக ஆதரவு வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.
 
பாகிஸ்தானின் மோசடி அரசியலை நீதியின் முன்னிலையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இம்ரான் கான் தமது தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.