குற்றச்சாட்டை நிராகரித்த சீனா

Sunday, 19 August 2018 - 13:57

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
சீனாவின் குண்டுத் தாக்குதல் விமானம் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க பெண்டகன் முன்வைத்த குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.
 
 அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன், தமது வருடாந்த அறிக்கையை அமெரிக்க காங்கிரஸிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில், அமெரிக்கா உள்ளிட்ட பசுபிக் வலயத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பயிற்சிகளில் சீனாவின் குண்டுத் தாக்குதல் விமானம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெண்டகனின் கருத்து அடிப்படையற்றது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கருத்தின் காரணமாக உண்மை நிலை முழுமையாக திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
 
சீன இராணுவத்தின் அபிவிருத்திப் பணிகள் தமது நாட்டை  பாதுகாக்கும் நோக்கமுடையது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.