திட்டமிட்டபடி உடன்படிக்கை முன்னெடுக்கப்படும்..

Sunday, 19 August 2018 - 14:02

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF++%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணத்தைக் கொண்டும் அந்த உடன்படிக்கை மீளப்பெறப்படமாட்டாது என சர்வதேச வர்த்தக துறை ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் அளப்பரிய வர்த்தக வாய்ப்புக்களை முன்னெடுக்க முடியும் என்பதுடன் ஏனைய உலக நாடுகளுடனான வர்த்தகத்தினை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தை மீள பெறும் பட்சத்தில் தெற்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுடனான 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகத்தினை இழக்க நேரிடும்.

கடந்த வருடம் ஏற்றுமதி மூலம் இலங்கை 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறமுடிந்தது.

அதில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக துறை ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.