இணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு!!

Monday, 20 August 2018 - 6:22

%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%21%21
இணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எகிப்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பல புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து இணைய தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையான இணையத்தளங்களை நடத்திச் செல்லுதல் மற்றும் இதற்கு பிரவேசிக்கின்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இணை வழி குற்றங்களை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.