ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்ட சுற்றுப்பயணம்

Monday, 20 August 2018 - 7:19

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
மாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை அவைத்தலைவர் சுதர்சன் தெனிபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் 34 உறுப்பினர்களும் இந்த மாத இறுதியில் ரஸ்யாவில் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்கான சுற்றுலாவை திட்டமிட்டிருந்த நிலையில், மாகாண சபை முகம் கொடுத்துள்ள நிதி நெருக்கடி காரணமாக அந்த சுற்றுப்பயணத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது வீதி அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட சில அதிகாரிகளை மாத்திரம் அனுப்புமாறு அந்த உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.