இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

Monday, 20 August 2018 - 8:14

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்தோனேசியாவின் கிழக்கு லோம்பக் தீவில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வானது 6.9 மெக்னிடியுட்டாக (magnitude) பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்போது நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் பலியானார்.

இந்த நிலையில், இந்த நில அதிர்வினைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுமா என்ற அறிவிப்பு உடனடியாக வெளியிடப்பட்டவில்லை.

நேற்று காலை 6.3 மெக்னிடியுட் (magnitude) நில அதிர்வு பதிவானது.

எவ்வாறாயினும் கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி தொடக்கம் லோம்பக் தீவில் ஏற்பட்ட 6.9 மெக்னிடியுட் நில அதிர்வினை தொடர்ந்து இதுவரையில் நூறுக்கும் அதிகமான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.