நாட்டுக்கு தேவையான பொருளாதார திட்டம் தொடர்பில் ஜே.வி.பி

Monday, 20 August 2018 - 8:21

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF
மக்களின் சமூக நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்கான பொருளாதார திட்டம் ஒன்று நாட்டிற்கு தேவை என ஜேவிபி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையானது, கிராமப்புற மக்களையும் கொழும்புக்கு அழைப்பது போன்று உள்ளது.

கொழும்பில் இடம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

எனவே, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை கிராமப்புறங்களிலேயே, உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் கொழும்பை மாத்திரமே கேந்திரமாக கொண்டுள்ளது.

இந்தநிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.