பாரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்..! உலகத்திற்கே சுனாமி ஆபத்து!!

Monday, 20 August 2018 - 21:19

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21%21
தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி உலகம் முழுவது சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகின்றன.

இதன் விளைவாக கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு கடல் நீரில் வெப்பமும் அதிகரிக்கிறது.

இதனால் இன்னும் சில ஆண்டுகளில் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்வதோடு சுனாமி ஆபத்துக்களும் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வின் தகவல் பின்வருமாறு, பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது.

அப்படி சுனாமி எழுந்தால், தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் துவங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.