திருட சென்ற காவல் துறை உத்தியோகத்தர்களை மடக்கி பிடித்த S.T.F அதிகாரிகள்

Tuesday, 21 August 2018 - 10:29

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+S.T.F+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
களுத்துறை பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வீட்டில் கொள்ளையிட முயற்சித்த காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளிட்ட ஐவர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணத்துறை காவல் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவில் கடமையாற்றும் காவல் துறையினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள காவல் துறை உத்தியோகத்தர்களை தவிர்ந்த ஏனையவர்கள் பாதாள உலக குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.