விளையாட்டத் துறை அமைச்சரின் அதிகாரத்தை குறைக்க 9 பேர் அடங்கிய குழு

Wednesday, 22 August 2018 - 6:40

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
விளையாட்டு சட்டம் ஊடாக அமைச்சருக்கு கிடைக்கப்பெற்றுள்ள வரம்பற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவின் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.