வெனிசுலாவில் பயங்கர நிலநடுக்கம்

Wednesday, 22 August 2018 - 8:51

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வை, வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த நில அதிர்வு தொடர்பான பின் விளைவுகள் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதனிடையே, வனவாட்டு நாட்டிலும் 6.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் ஏற்பட்ட இந்த நில அதிர்வு தொடர்பான சேத விபரங்களும் இதுவரையில் வெளியாகவில்லை.