Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Friday, 14 September 2018 - 19:55
தமிழக ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டது என குற்றச்சாட்டு
796

Views
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தொடர்பான தமிழக அரசாங்கத்தின் பரித்துரையை தமிழக ஆளுநர் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை, விடுதலையை மறுக்கும் உள்நோக்கம் கொண்டது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அதன் மாநில செயலாளர், இரா.முத்தரசன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்கும் நோக்கில் தமிழக அரசாங்கம் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.

அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்பதற்கு மாறாக ஆளுநர் அதனை மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது காலம் கடத்தும் செயல் மட்டுமல்ல, விடுதலையை மறுக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, அவர்களின் விடுதலை தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சின் கருத்தை ஆளுநர் கோருவது அதிர்ச்சியளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல மாநில உரிமைகளுக்கு முரணானதுமாகும

ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
16,143 Views
HiruNews
HiruNews
HiruNews
10,266 Views
HiruNews
HiruNews
HiruNews
27,992 Views
HiruNews
HiruNews
HiruNews
250 Views
HiruNews
HiruNews
HiruNews
63,046 Views
Top