20 வயதிற்கு உட்பட்ட 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தி மரணம்

Monday, 17 September 2018 - 19:44

20+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
போதைப்பொருட்களை பயன்படுத்திய ஏழு பேர் வியட்நாமில் மரணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஹனோயில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, மேலும் ஐவர் தொடர்ந்தும் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்தியவை எந்தவகையான போதைவஸ்து என்பதனை இனங்காண்பதற்காக குறித்த போதைப்பொருள் மாதிரிகள் ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு இணங்க, பாதிக்கப்பட்டவர்களினால் உபயோகிக்கப்பட்ட போதைவஸ்து புது வகையைச் சேர்ந்தது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2 லட்சத்து 20 ஆயிரம் வியட்நாமியர்கள் போதைவஸ்துவினை பாவிப்பதற்கான பதிவைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.