இந்திய அணிக்கு பயிற்சி வழங்கப்போகும் இலங்கை பயிற்சியாளர்

Tuesday, 18 September 2018 - 14:04

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
இந்திய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு வலைப் பயிற்சியின் போது பந்துகளை எறிவதற்காக, இலங்கையைச் சேர்ந்த நுவான் செனவிரத்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கட் அணியின் ஆசிய கிண்ணத்தொடருக்கு தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஏலவே வலை பயிற்சியின் போது பந்துகளை எறிவதற்காக இரண்டு இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் இருவரும் வலதுகையால் பந்துகளை எறிபவர்கள் என்பதால், இடதுகையால் பந்துகளை எறிகின்ற நுவான் செனேவிரத்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் 2 முதற்தரப் போட்டியில் விளையாடியுள்ள 38 வயதான அவர் பந்துகளை எறிவதை சிறப்புச் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.