விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான இலங்கையரிடம் விசாரணை

Wednesday, 19 September 2018 - 13:50

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், தமிழ் நாட்டில் கைதான இலங்கையர் ஒருவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

த ஹிந்து இதனைத் தெரிவித்துள்ளது.

சீ. குமார், அல்லது முருகன் அல்லது உதயகுமர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 37 வயதான அவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்தார்.

அவரை விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்ட கியு பிரிவு காவற்துறையினர், நேற்றும் முன்தினமும் அவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜுலை மாதம் சைனைட் உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமான பொருட்களுடன் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த போது, கே.கிருஷ்ணகுமார் மற்றும் வீ.சுபாகரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் சீ.குமார் என்ற குறித்த நபரும் இலங்கைவர முயற்சித்த போதும், காவற்துறையினரால் அவரை கைது செய்ய முடியவில்லை.

பின்னர் அவர் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து, தமிழகம் திரும்பியதாகவும் சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் பல்வேறு தொழில்களை புரிந்துவந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அவருக்கு ஃப்ரான்ஸ் மற்றும் சுவிட்சார்லாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களால் பணம் அனுப்பப்பட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் குழு ஒன்றுடன் அவர் செயற்பட்டு வந்திருப்பதாகவும், அவருடன் தொடர்புகொண்ட ஏனையவர்கள் தேடப்படுவதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2017ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் சட்டம், கடவுச் சீட்டு சட்டம், வெளிநாட்டவர் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வழக்கு இந்த மாதம் 27ம் திகதி விசாரணைக்கு வருகிறது.