21 நாட்களுக்கு ஒருவர் மரணம்..! இலங்கையில் மர்ம கிராமம்! (படங்கள்)

Wednesday, 19 September 2018 - 15:02

21+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ - ஹல்மில்லவெவ பிரதேசத்தில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மரணங்கள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

21 நாட்களுக்கு ஒருவராக குறித்த கிராமத்தில் மரணங்கள் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக குறித்த கிராமத்தில் பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் பூஜை வழிப்பாடு இடம்பெறாததால் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

தொடர் மரணங்கள் காரணமாக கிராம மரண நிவாரண சங்கத்தில் கூட நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் , தாம் கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பல வருடங்களாக இந்த கிராமத்தில் நீர் இல்லாததால் அவர்கள் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் , கிராமத்தில் சிலர் தமது கிராமத்தில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் காவல் தெய்வத்திற்கான பூஜைகள் இடம்பெறாமையினால் கிராமத்திற்கு தெய்வ சாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நிலவும் கடும் வரட்சி காரணமாக இந்த கிராமத்தில் இவ்வாறு மரணங்கள் நிகழ்வதாக மற்றொரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியான மரணங்கள் காரணமாக கிராம மக்கள் மட்டுமின்றி தேரர்களும் கவலையில் உள்ளதாக விகாராதிபதி தெரிவித்தார்.

பிரித் பாராயனம் மற்றும் பூஜைகளை மேற்கொள்ள தற்போதைய நிலையில் கிராம மக்கள் தயாராகி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தின் அனைத்து குளங்கள் , ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வற்றியுள்ளதால் மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாடுக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.