130 எலும்புக் கூடுகள் மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு அளிப்பு

Wednesday, 19 September 2018 - 19:45

130+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மன்னார் மனித புதைக்குழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள 136 மனித எலும்புக்கூடுகளில், 130 எலும்புக் கூடுகள் மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக, விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் சதொச வளாகத்தில் உள்ள மனித புதைக்குழியில் இன்று 74வது தடவையாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.

குறித்த பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு, நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்தநிலையில், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற, விசேட கூட்டம் ஒன்றின்போது, ஒவ்வொரு புதன்கிழமையும், தமக்கு ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்கான அனுமதியினை மன்னார் நீதவான் வழங்கியுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.