மேலதிக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி

Thursday, 20 September 2018 - 7:10

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
சென்னை ஸ்ரீபெரம்புத்தூரில் 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின்போது, 16 பேர் உயிரிழந்ததுடன், ஏராளாமானோர் படுகாயங்களுக்கு உள்ளானர்.
 
ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
 
பாதிப்படைந்தவர்கள் தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற மனு மீதான மேலதிக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான அனுமதி தற்போது உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்குமா? என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.