ஸ்டுவர்ட் ப்ரோட் வேண்டும் - ஜோ ரூட்

Thursday, 20 September 2018 - 13:18

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கட் குழாமில், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் (Stuart Broad) உள்ளடக்கப்பட வேண்டும் என்று அணித்தலைவர் ஜோ ரூட் வலியுறுத்தியுள்ளார்.
 
ப்ரோட் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் இடம்பெற்ற 7 டெஸ்ட் போட்டிகளில் 23 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
 
ஆனால் அவர் இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடருக்கான குழாமில் இருந்து நீக்கப்படவிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி மூன்று சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களுடன் பயணிக்கும் என்ற அடிப்படையிலேயே ஸ்டுவர்ட் போர்ட் நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
ஆனால் இலங்கையில் ஸ்டுவர்ட் ப்ரோடின் அனுபவம் இங்கிலாந்து அணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.