9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Thursday, 20 September 2018 - 21:47

9+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
வரட்சி நிவாரணங்களுக்காக 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரட்சியான காலநிலையால் வடமத்திய மாகாணத்தின் சுமார் 4 லட்சத்து 20ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான குடிநீர், உலர் உணவு உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் இந்த நிவாரண பணிகளுக்காக மாதமொன்றிற்கு 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த நிதியை மாவட்ட செயலாளருக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.