சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Thursday, 20 September 2018 - 22:03

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
உந்துருளியில் பயணிப்போர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

அத்துடன், வாகன சராதிகள் ஆசனப் பட்டியை அணிய வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சட்டமானது முறையாக அமுல்படுத்தப்படாத காரணத்தினால், அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் நீதிபதிகளான மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நீதிபதிகள் அமர்வு, தலைக்கவசத்தைக் கட்டாயமாக அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை தமிழக அரசாங்கம் மக்களிடையே கொண்டுச்செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அதன் மூலமாக ஏற்படும் நன்மைகள் குறித்தும், வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு தலைக்கவசத்தை அணியும் உத்தரவை செயல்படுத்த வேண்டும்,

அத்துடன், அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 23 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கையும் அன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.