பிரித்தானிய பிரிக்சிட் யோசனையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்

Friday, 21 September 2018 - 8:17

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் முன்வைக்கப்பட்ட பிரிக்சிட் யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

சல்ஸ்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் கலந்துக் கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டொனால்ட் டஸ்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரான பொருளாதார ஒத்துழைப்பு யோசனை பிரித்தானிய பிரதமரால் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச்சந்தை முறைமைக்கு ஆபத்தானது என்ற டொனால்ட் ட்ஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முரண்பாடுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட தெரேசா மே, இதுகுறித்து வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட்டால், மாற்றுவழிகளை பிரித்தானியா தயாரிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.