சீன இராணுவத்துக்கு பொருளாதார தடை

Friday, 21 September 2018 - 15:14

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
சீன இராணுவத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
 
ரஷ்யாவிடம் இருந்து தாக்குதல் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொள்வனவு செய்தமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
யுக்ரெயினில் இருந்து க்ரைமியாவை பிரித்தமைக்காக, ரஷ்யாவிற்கு எதிராக 2014ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
 
இந்த தடையை மீறி ரஷ்யாவில் இருந்து சுக்கோய் சூ-35 வகை ஜெட் விமானங்கள் மற்றும் எஸ்-400 வகை ஏவுகனைகளை சீனா கொள்வனவு செய்துள்ளது.
 
இதனை அடுத்தே சீனாவின் இராணுவம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி இருக்கிறது.
 
ஆனால் 2014ம் ஆண்டு ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டு வல்லரசுகளும் பொருளாதார தடையை ஏற்படுத்தும் போது, அதில் சீனா இணைந்துக் கொள்ளவில்லை.