லண்டன் பிரஜைகள் எனக்கூறி இலங்கை வந்த தாயும், மகளும்.. பின்னர் நேர்ந்த கதி

Friday, 21 September 2018 - 17:29

%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
போலி கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்து லண்டன் நோக்கி பயணிப்பதற்கு முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 4.15 மணியளவில் கல்ப் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளன்.

அவர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், தாம் பிரித்தானிய பிரஜைகள் என குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

எனினும் அவர்களது கடவுச்சீட்டுக்களை பரிசோதனை செய்த போது அவை போலியானவை என தெரியவந்துள்ளது.

பின்னர் 65 வயதான தாயிடமும் 37 வயதான மகளிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஈரான் பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களை அபுதாபி நோக்கி நாடு கடத்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.