வாகனங்களின் விலை அதிகரிப்பு...!!

Saturday, 22 September 2018 - 11:29

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21%21
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 170 ரூபா 65 சதமாக பதிவாகி இருந்தது.

ரூபாவின் மதிப்பிறக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நூற்றுக்கு 8 சதவீதத்தினால் அதிகரிப்பதாக வாகன சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது பதிவுசெய்யப்படாத வாகனத்தின் விலை குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபா அளவில் உள்ளது.

இந்த நிலையில், அதன் விலை குறைந்தபட்சம் இரண்டரை லட்சத்திலிருந்து அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அதி சொகுசு வாகனங்களின் விலைகள் 6 லட்சம் ரூபாவிலிருந்து 8 லட்சம் ரூபா வரை அதிகரிப்பதாகவும் வாகன இறக்கமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.